கடைகள் அடைப்பு; பேருந்துகள் நிறுத்தம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை பேருந்துகள் சேவை முடங்கியது. வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை பேருந்துகள் சேவை முடங்கியது. வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன.
கருணாநிதி மறைவையடுத்து, கடலூர் மாவட்டத்தில் அனைத்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. ஆட்டோ, வேன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொதுமக்களின் நடமாட்டமும் இல்லாததால், ஆங்காங்கே காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளிலும் இதே நிலை நீடித்ததுடன், அங்குள்ள மளிகைக் கடைகள், தேநீர்க் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.