FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அவதூறுப் புகார்: இரா.முத்தரசன் மீது வழக்கு

பொதுக் கூட்டத்தில் தனி நபரை அவதூறாகப் பேசியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் மீது

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பொதுக் கூட்டத்தில் தனி நபரை அவதூறாகப் பேசியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் மீது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர். 
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பங்கேற்று பேசினார். அப்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரை, மாநிலக்குழு உறுப்பினர் டி.மணிவாசகத்தின் தூண்டுதலின் பேரில் இரா.முத்தரசன் மிரட்டும் வகையில் பேசியதாக, திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் எம்.சேகர் புகார் அளித்தார். 
ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லையாம். இதுகுறித்து, கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எம்.சேகர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. இருப்பினும், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படாததை அடுத்து சேகர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். இதுதொடர்பாக கடலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-3, வழக்குப் பதிவு செய்யுமாறு கண்டிப்பான உத்தரவை அண்மையில் பிறப்பித்தது. 
இதையடுத்து, இரா.முத்தரசன், டி.மணிவாசகம் ஆகியோர் மீது மிரட்டல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments