தடகள விளையாட்டுப் போட்டி: என்எல்சி பள்ளி மாணவர்கள் வெற்றி
சென்னையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சென்னையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
ரிலையன்ஸ் பவுன்டேஷன் இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், நெய்வேலி வட்டம்-10, என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14, 16, 18 வயது பிரிவுகளில் பல்வேறு வகை போட்டிகளில் கலந்துகொண்டு 7 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
16 மற்றும் 18 வயது பிரிவுகளில் ஒட்டுமொத்த சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், வெற்றிக்கோப்பை பெற்றனர். 18 வயது பிரிவில் மாணவர் வி.ஸ்ரீராம் தனிநபர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. என்எல்சி பள்ளிகளின் கல்வித் துறை செயலர் இள.நெடுமாறன், ஏ.ஜி.எம்., காதர், விளையாட்டுப் பள்ளி தாளாளர் பி.மித்ரகாந்த், தலைமையாசிரியை எம்.ராஜேஸ்வரி, உடல்கல்வி ஆசிரியர்கள் பி.பாலாஜி, ராஜேஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர் ஜேம்ஸ் ஆகியோரை வாழ்த்திப் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.