திமுக செயற்குழு கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
எம்எல்ஏ துரை.கி.சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை ஒருமனதாக தேர்வு செய்த பொதுக்குழுவுக்கு பாராட்டுத் தெரிவிப்பது, வருகிற 15-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கடலூர் கிழக்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகக் கலந்துக் கொள்வது. குட்கா ஊழலைக் கண்டித்து, கடலூர் மஞ்சக்குப்பம், தலைமை தபால் நிலையம் முன் வருகிற 18- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், ஒன்றியச் செயலர்கள் சிவகுமார், முத்துசாமி, தங்க.ஆனந்தன், பெருமாள், மாமல்லன், சோழன், மதியழகன், திருமாவளவன், ராயர், சபாநாயகம் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.பாலமுருகன், நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.