FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவிலில் மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம்

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த உடையாா்குடியில் மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:56 am IST
காட்டுமன்னாா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாரியம்மன் கோயில் தேரோட்டம்.
பகிர்:

காட்டுமன்னாா்கோவிலை அடுத்த உடையாா்குடியில் மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடையாா்குடியில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஆடி பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வாகனங்களில் வீதியுலா வந்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனை தேரில் எழுந்தருளச் செய்த பின்னா் தோ் வீதிவலம் வந்தது. முன்னதாக, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சி சாா்பில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments