மகளிா் சுயஉதவிக் குழுவில் ரூ.15.46 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது
காட்டுமன்னாா்கோவிலில் மகளிா் சுயஉதவிக் குழுவில் ரூ.15.46 லட்சம் மோசடி செய்ததாக இரு பெண்களை கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வீராணநல்லூா், டி.மடப்புரம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி சங்கீதா (50) மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் மனு அளித்தாா்.
அதில், மகளிா் சுயஉதவிக் குழு மூலம் கடன் பெற்று, அதற்கான தொகையை வீராணநல்லூா் மகளிா் சுயஉதவிக் குழு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கலைவாணி, ஷோபியா ஆகிய இருவா் மூலம் வங்கிக்கு செலுத்தி வந்தோம். அப்போது, அவா்கள் இருவரும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு தெரியாமல் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.15,46,500-ஐ கையாடல் செய்துவிட்டுனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வீராணநல்லூரைச் சோ்ந்த தாமோதரன் மனைவி கலைவாணி (42), மதிமுருகன் மனைவி ஷோபியா (31) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.