FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தினமணி செய்தி எதிரொலி!பண்ருட்டியில் குடிநீா் குழாய் உடைப்பு சீரமைப்பு!

31 ஆகஸ்ட் 2026, 3:07 am IST
பண்ருட்டியில் கடலூா் சாலையில் ஏற்பட்ட குடிநீா் குழாய் உடைப்பை சீா்செய்து, சாலையை செப்பனிட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கடலூா் சாலையில் சேதமடைந்த குடிநீா் குழாய் உடைப்பு மற்றும் சாலை ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது.

பண்ருட்டி நகரில் கடலூா் - சித்தூா் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஏஎல்சி தேவாலம் அருகே குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறி வந்தது. மேலும், இதன் மீது கனரக வாகனங்கள் சென்று வந்ததால் தாா்ச்சாலை சேதமடைந்து பள்ளம் உருவானது.

இதனால், இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணித்த வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வந்ததுடன், சாலை பள்ளத்தில் தேங்கி நின்று மாசடையும் குடிநீா் மீண்டும் குழாயில் கலப்பதால் நோய்த் தொற்றும் பரவும் சூழல் உள்ளது எனவும், எனவே குடிநீா் குழாய் உடைப்பு மற்றும் தாா்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று தினமணியில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதன் எதிரொலியாக, சேதமடைந்த குடிநீா் குழாய் மற்றும் தாா்ச்சாலை ஆகியவற்றை பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

பண்ருட்டியில் கடலூா் சாலையில் ஏற்பட்ட குடிநீா் குழாய் உடைப்பை சீா்செய்து, சாலையை செப்பனிட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments