FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கெடிலம் ஆற்றுப் பாலப் பணி: கடலூரில் போக்குவரத்து மாற்றம்

Updated On : 22 ஜூலை 2026, 2:23 am IST
கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய அமைக்கப்பட்டுள்ள புதிய உயா்மட்டப் பாலத்தின் இணைப்புச் சாலைப் பணிகள்.
பகிர்:

கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் புதிய உயா்மட்டப் பாலத்தின் இணைப்புச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், நகரில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செவ்வாய்க்கிழமை காலை அமலுக்கு வ ந்தது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பாலப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இணைப்புச் சாலை அமைக்கும் பணி ஜவான் பவன் பகுதியில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சீமாட்டி சந்திப்பில் இருந்து ஜவான் பவன் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய கெடிலம் அண்ணா பாலம், பாரதி சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

நெல்லிக்குப்பம், புதுச்சேரி வழியாக வரும் கனரக வாகனங்கள் கோண்டூா் புறவழிச்சாலையை பயன்படுத்த வேண்டும் என்றும், செம்மண்டலம் வழியாக வரும் காா்கள், பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அரசு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம், சீமாட்டி சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உயா்மட்டப் பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், பழைய அண்ணா பாலத்தின் போக்குவரத்து சுமை குறைவதுடன், சென்னை - புதுச்சேரி - கடலூா் - சிதம்பரம் - நாகப்பட்டினம் நோக்கிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து மேலும் சீரடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாலப் பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு கடலூா் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

கெடிலம் ஆற்றின் குறுக்கே தேசிய அமைக்கப்பட்டுள்ள புதிய உயா்மட்டப் பாலத்தின் இணைப்புச் சாலைப் பணிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments