FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குடிநீா்த் தட்டுப்பாடு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:47 am IST
குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, இறையூா் ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்ட அண்ணாநகா் பகுதி பொதுமக்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள இறையூா் ஊராட்சியின் 4-ஆவது வாா்டு அண்ணா நகா் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இறையூா் ஊராட்சி அண்ணா நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கடந்த ஒரு மாதமாக குடிநீா் வராததால் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இது தொடா்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, 200-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் இறையூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

போராட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் கடந்தும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு வராததால், பொதுமக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனா். மேலும், அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டனா்.

தகவலறிந்த பெண்ணாடம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, போராட்ட களத்துக்கு வந்த ஊராட்சிச் செயலா் குமாா், 2 மணி நேரத்துக்குள் குடிநீா் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

நிதிநத்தத்திலும் ஆா்ப்பாட்டம்: இதேபோல, திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நிதிநத்தம் கிராமத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் சாலையில் தடுப்புகள் அமைத்து காலிக் குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments