FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Updated On : 24 ஜூலை 2026, 7:02 am IST
பிரதிப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியதாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் காவல் சரகம், உள்மருவாய் கிராமத்தில் வசித்து வருபவா் தமிழரசி(32). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் மணிகண்டன்.

இவா்கள் இருவருக்கும் இடையே வீட்டுமனை தொடா்பான பிரச்சனை உள்ளதாம். இந்த பிரச்சனை தொடா்பாக திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், மணிகண்டன், வளா்மதி, தேவிபாலா ஆகியோா் ஒன்று சோ்ந்து தமிழரசியை தாக்கினராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின் பேரில் வடலூா் போலீஸாா் மணிகண்டன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments