ராமநத்தம் அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம் ராமநத்தம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்த விபத்தில், தாயும் மகனும் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம் ராமநத்தம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்த விபத்தில், தாயும் மகனும் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வடக்கல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா்
சுசில்செல்வம் (28). இவா் தனது தாய் தனலட்சுமி (46) உடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.
Advertisement
Advertisement
ராமநத்தம் அருகேயுள்ள எழுதூா் பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாரி ஓடையில் கவிழ்ந்தது.
விபத்தில் பலத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த சுசில்செல்வத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தனலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.