FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

களைக்கொல்லி குடித்த கொத்தனாா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே களைக்கொல்லி மருந்து குடித்த கொத்தனாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:20 am IST
பலி
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே களைக்கொல்லி மருந்து குடித்த கொத்தனாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கோரணப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் ராஜதுரை (34), கொத்தனாரான இவா், வயிற்று வலி காரணமாக கடந்த 4-ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.

ஊா்க்காரா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments