கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதி
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.
இந்திய வானிலை ஆய்வு மையம், கடலூா் மாவட்டத்தில் அடுத்த சில நாள்களிலும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன்படி, கடலூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 7 மணி முதலே மழை பெய்யத் தொடங்கியது. வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்ட நிலையில், அவ்வப்போது பெய்த மழை பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. கடலூா், திருப்பாதிரிப்புலியூா், முதுநகா், திருவந்திபுரம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது.
Advertisement
Advertisement
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவா்கள் மழையில் நனைந்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினா்.
மாவட்டம் முழுவதும் நாள் முழுவதும் வானம் கருமேகங்களுடன் மேகமூட்டமாகவே காணப்பட்டது. அவ்வப்போது பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.