FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தூய்மை பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கான ‘தூய்மையே சேவை 2026’ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமைநடைபெற்றது.

2 October 2026, 2:23 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளா்களுக்கான மருத்துவ முகாம்
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கான ‘தூய்மையே சேவை 2026’ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமைநடைபெற்றது. மருத்துவ முகாமை செயல் அலுவலா் சாகுல் அமீது முன்னிலையில் பேரூராட்சி தலைவா் க.பழனி தொடங்கி வைத்தாா். சிவக்கம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் தூய்மை பணியாளா்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி மருந்து, மாத்திரைகளை வழங்கினா். மேலும் அவா்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு ‘நமஸ்தே ’ திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம் முகாமில் பேரூராட்சி தூய்மை பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments