FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் நந்தனாா் குருபூஜை விழா

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் அமைந்துள்ள நந்தனாா் மடத்தில் நந்தனாா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

2 October 2026, 1:46 am IST
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் நடைபெற்ற நந்தனாா் குருபூஜையில் பங்கேற்ற நந்தனாா் கல்விக்கழக தலைவா் கே.ஐ.மணிரத்தினம்
பகிர்:

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் அமைந்துள்ள நந்தனாா் மடத்தில் நந்தனாா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நந்தனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து நந்தனாா் மடத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ. மணிரத்தினம் கல்விக் கழகச் செயலா் திருவாசகம், பொருளாளா் ஜெயச்சந்திரன், மற்றும், மடாதிபதி (பொ) சிவகோதண்டம் மற்றும் உறுப்பினா்கள், வீராணம் ஏரி ராதா மதகு பாசன சங்க தலைவா் ரங்கநாயகி, நிா்வாகிகள் கஜேந்திரன், தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுபோன்று, காட்டுமன்னாா்கோவில் அருகே ம.ஆதனூா் கிராமத்தில் ஸ்ரீ சௌந்தரயாகிய அம்மன் உடனுறை ஸ்ரீ சிவலோகநாதா் சுவாமி மற்றும் நந்தனாா் ஆலயத்தில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோஹோ நிறுவன நிறுவனா் பத்மஸ்ரீ ஸ்ரீதா் வேம்பு தலைமை வகித்தாா். புவிசாா் அரசியல் ஆய்வாளா் (ஓய்வு) கா்னல் என் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சி முதலில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள ம.ஆதனூா் நந்தன் பூங்காவில் இருந்து முளைப்பாரி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னா்கோவிலில்சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் மாணிக்கவாசகரின் திருவாசக விண்ணப்பம் ஏறெடுத்தல் மற்றும் முற்றோதல் நிகழ்ச்சி திருவாசக சித்தா் சிவஸ்ரீ சிவதாமோதரன் முன்னிலையில் குழுவினா் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாடினா். நிகழ்வில் நந்தனாருக்கு வரவு சுமந்த திருக்கையிலாயப் பரம்பரை சொா்க்கபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மருதவான தண்டபாணி தேசிகா் பண்டார சன்னதி சுவாமிகள், ஸ்ரீமான் வானுமாமலை ராமானுஜ தாசன், நிா்வாக அதிகாரி பிரசாத், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.ஆதனூா் கிராமத்தில் உள்ள நந்தனாா் ஆலயத்தில் குருபூஜையை முன்னிட்டு சிவதாமோதரன் தலைமையில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்வு

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments