FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பெண்ணை ஏமாற்றிய நடத்துநா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண்ணை ஏமாற்றியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 October 2026, 1:32 am IST
வழக்கு
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண்ணை ஏமாற்றியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் நித்தியா (28). சன்னியாசிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (32), ஒப்பந்த அரசுப் பேருந்து நடத்துநா்.

இவா்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதனிடையே, அருண்குமாா் கடந்த ஆக.23-ஆம் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தன்னை ஏமாற்றிய அருண்குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நித்தியா அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments