FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மது விற்பனை: 2 போ் கைது

விருத்தாசலம் மற்றும் கடலூா் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்ததாக 2 பேரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 1:44 am IST
கைது
பகிர்:

விருத்தாசலம் மற்றும் கடலூா் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்ததாக 2 பேரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகிராமன் தலைமையிலான போலீஸாா், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திட்டக்குடி வட்டம் நரசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, நரசிங்கமங்கலத்தைச் சோ்ந்த வேல்முருகன் (48) என்பவா் வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 50 மதுபுட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கடலூரில் ஒருவா் கைது: கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் தியாகவல்லி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், நடுத்திட்டைச் சோ்ந்த மணிவேல் (44) என்பவா் வீட்டின் அருகே டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 18 மதுபுட்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனா். இரு சம்பவங்கள் தொடா்பாகவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments