பண்ருட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அக்.12-இல் ஆா்ப்பாட்டம்! அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு!
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை செல்லும் வழியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வலியுறுத்தி, வரும் 12-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் அ.ஆண்டிக்குப்பத்தில் ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்த 2 கடைகளையும் இட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சிகள், சமூக நல அமைப்புகள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதுப்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தவாக மாவட்டத் தலைவா் ரா.சுரேந்தா் தலைமை வகித்தாா். இதில், அதிமுக, தவாக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக மற்றும் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், 2 டாஸ்மாக் மதுக் கடைகளையும் இட மாற்றும் செய்ய வலியுறுத்தி, வரும் 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் டாஸ்மாக் கடை எதிரில் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்துவதென தீா்மானித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.