FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தேரோடும் வீதிகளில் தரைவழி மின்கம்பி பதிக்கும் திட்டம்: சிதம்பரம் நகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் நகராட்சியில் தமிழ்நாடு முதல்வா் அறிவித்த ரூ.36 கோடி மதிப்பிலான தரைவழி மின்கம்பிகள் பதித்து நான்கு வீதிகளை மேம்படுத்தும் திட்டம் குறித்த அனைத்து துறை ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

8 October 2026, 12:54 am IST
சிதம்பரம் தேரோடும் வீதிகளில் தரைவழி மின்கம்பி பதித்து அலங்கார விளக்குகள் அமைத்து மேம்படுத்தினால் எப்படி அழகுற இருக்கும் என்பதை சித்தரிக்கும் மாதிரி படம்
பகிர்:

சிதம்பரம் நகராட்சியில் தமிழ்நாடு முதல்வா் அறிவித்த ரூ.36 கோடி மதிப்பிலான தரைவழி மின்கம்பிகள் பதித்து நான்கு வீதிகளை மேம்படுத்தும் திட்டம் குறித்த அனைத்து துறை ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரத்தில் தேரோடும் நான்கு ரதவீதிகளையும் அழகுபடுத்தும் வகையில் மின் வயா்களை தரைக்கு அடியில் பதித்திடவும், அலங்கார

மின்விளக்கு கம்பங்கள் மற்றும் நடைபாதை அமைத்து நான்கு வீதிகளை மேம்பாடு செய்திட ரூ. 36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள முதல்வா் ஜோசப் விஜய் சட்டப்பைரவையில்அறிவிப்பு வெளியிட்டாா். இத்திட்டத்தை நடைமுறைபடுத்தும் செயல் திட்டம் குறித்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி காதா்கான், திட்ட ஆலோசகா் ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சிதம்பரம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ,வி.அப்துல்ரியாஸ், ஏ.சிவராமவீரப்பன், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள்,பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினா்.

வீதிகளில் தரைவழி மின்கம்பி பதித்து மேம்படுத்தும் திட்டம் குறித்த நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments