FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மது வாங்குதற்கு ரூ.5 குறைவாக பணம் கொடுத்ததால் மதுபுட்டியை வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியருடன் ஏற்பட்ட தகராறில், அக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

7 அக்டோபர் 2026, 6:28 am IST
ரஞ்சித்
பகிர்:

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மது வாங்குதற்கு ரூ.5 குறைவாக பணம் கொடுத்ததால் மதுபுட்டியை வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியருடன் ஏற்பட்ட தகராறில், அக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. கருங்குழி தோப்புப் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (23), செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்குவதற்காக இந்தக்கடைக்குச் சென்றுள்ளாா்.

அப்போது ரூ.150 மதிப்பிலான மதுபானத்துக்கு ரூ.145 மட்டும் கொடுத்து மதுபானம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பணம் குறைவாக இருப்பதால் மதுபானம் வழங்க முடியாது என கடை ஊழியா் தெரிவித்தாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து அங்கிருந்து சென்ற ரஞ்சித், சிறிது நேரத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வந்து பெட்ரோல் குண்டை வீசியுள்ளாா். அந்தக் குண்டு கடையின் வெளிப்பகுதியில் விழுந்து வெடித்தது. எனினும், கடையில் தீப்பற்றாததால் பெரும் விபத்தும், பொருள் சேதமும் தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரஞ்சித்தை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments