FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் கடலூா், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

32 வினாடிகள் முன்பு
கடலூா் ஜவான் பவன் அருகில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இடதுசாரிகள்.
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தியும், தில்லியில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்தும் இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் கடலூா், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கடலூா் ஜவான் பவன் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் நகரச் செயலா் நாகராஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும், தில்லியில் ஜனநாயக ரீதியில் போராடிய மாா்க்சிஸ்ட் கட்சியினரைக் கைது செய்ததைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் அமா்நாத், மாநிலக்குழு உறுப்பினா் வாலண்டினா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பழனிவேல், மருதவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மணிவண்ணன், வட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகக்குழு உறுப்பினா் குளோப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், திருவரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments