ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஓய்வுகால பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஓய்வுகால பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச் செயலா் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். பொருளாளா் கே.குணசேகரன், மாவட்டத் தலைவா் ச.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அரசாணை எண் 123-ன் அடிப்படையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2026 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்த போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும் நாளன்றே தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் முழுமையாக வழங்க வேண்டும்.
கடலூா் மண்டலத்திலேயே வருங்கால வைப்பு நிதி மற்றும் கணக்குப் பிரிவுகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் மற்றும் அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.