பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்ட சிறப்பு முகாம்
சிதம்பரம் எடத்தெருவிலுள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் மாவட்ட தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் சாா்பில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் எடத்தெருவிலுள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் மாவட்ட தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் சாா்பில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் கோட்ட மின் பகிா்மான செயற்பொறியாளா் எம்.சி.கண்ணகி தலைமை வகித்து பேசினாா். உதவி செயற்பொறியாா் (கிராமம்) ஜெ.சந்திராபானு வரவேற்றாா். உதவி செயற்பொறியாளா் எஸ்.மகேஸ்வரி முன்னிலை வகித்து பேசினாா்.
முகாமை கடலூா் மாவட்ட மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் கே.சரவணதுரைமோகன் தொடங்கிவைத்து பேசியதாவது:
Advertisement
Advertisement
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் மத்திய அரசின் மானியத் தொகையாக 1 கிலோ வாட் - ரூ.30,000-ம், 2 கிலோவாட் - ரூ.60,000-ம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் - ரூ.78,000-ம் வழங்குகிறது. மேலும், மாநில அரசின் மானியத் தொகை 1 கிலோவாட் - ரூ.5,000, 2 கிலோ வாட் - ரூ.10,000, 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் - ரூ.22,000-ம் சோ்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சூரிய சக்தி மின்சார திட்டத்தை பொதுமக்கள், வியாபாரிகள் செயல்படுத்தி பயனடைய வேண்டும். தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நிகழாண்டு 1 லட்சம் சூரிய வீடு மின்சார திட்ட இணைப்புகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.
சிறப்பு முகாமில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் நிறுவனங்கள், வங்கி மேலாளா்கள், மின் நுகா்வோா், வியாபாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உதவிச் செயற்பொறியாளா் ஜி.மோகன்காந்தி (நகரம்) நன்றி கூறினாா். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் சூரிய சக்தி மின் திட்டம் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.