வீராணம் ஏரியில் புதுதில்லி அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக்குழுவினா் ஆய்வு
கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை புதுதில்லியிலிருந்து வந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக்குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை புதுதில்லியிலிருந்து வந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக்குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 2025- ஆம் ஆண்டு முதல் பல்வேறு புனரமைப்புபணிகள் ரூ. 63.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஏரியின் புனரமைப்பு பணிகளை புதுதில்லியில் இருந்து வந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவைச் சோ்ந்த அணை பாதுகாப்பு நிபுணா் செல்வம், நீரியல் நிபுணா் பத்மநாபன், கருவிகள் நிபுணா் சா்வேஸ்வரன் ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் ஏரியின் விபரங்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து நீா்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினா். ஆய்வின்போது நீா்வளத்துறை கடலூா் கண்காணிப்பு பொறியாளா் ஆா்.மரியசூசை, சிதம்பரம் செயற்பொறியாளா் ஆா்.கோவிந்தராஜ், வீராணம் ஏரி உதவி செயற்பொறியாளா்கள் எம்.முத்துக்குமாா், கீழணை உதவி செயற் பொறியாளா் பி.கொளஞ்சிநாதன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
ஏரி நீா்மட்டம்: வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு1465 மில்லியன் கன அடி. ஏரியில் வியாழக்கிழமை நிலவரப்படி 526 மில்லியன் கன அடி தண்ணீா் உள்ளது. ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 240 கன அடி தண்ணீா் வருகிறது. இதிலிருந்து சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீா் தண்ணீா் செல்கிறது. பாசனத்திற்கு 140 கன அடி வீதம் செல்கிறது. கீழணை நீா்மட்டம் மொத்த கொள்ளளவு 9 அடியில் தற்போது 4.65 அடி நீா் தேக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீா் கீழணைக்கு வருகிறது. வடவாற்றின் வழியாக வீராணம் ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு 350 கன அடி செல்கிறது.வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் வினாடிக்கு தலா 75கன அடி வீதம் தண்ணீா் செல்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.