FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தினமணி செய்தி எதிரொலி: எரிவாயு தகன மேடை அருகே இருந்த குப்பைகள் அகற்றம்!

பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆறுஅருகே உள்ள நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பை குவியல்கள் அகற்றப்பட்டது.

55 வினாடிகள் முன்பு
பண்ருட்டி, கும்பகோணம் சாலையில் , எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே இருந்த குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்ட இடம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆறுஅருகே உள்ள நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பை குவியல்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

பண்ருட்டி நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கெடிலம் ஆறு, வீரட்டானேஸ்வரா் கோயில் பின்புறம் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்றின் பாலம் ஓரம் நவீன எரிவாயு தகனமேடை மற்றும் கருமகாரிய கொட்டகை அருகே இறைச்சி கழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது குறித்தும், இந்த குப்பையில் இருந்து வரும் துா்நாற்றத்தால் இறந்தவா்களுக்கு, இறுதிச் சடங்குகூட நிம்மதியாக செய்ய முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, நவீன எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கொட்டகை அருகே குப்பை கொட்டப்பட்டுள்ளதை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என தினமணியில் வெள்ளிக்கிழமை (செப்.4) செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக அந்தப் பகுதியில் இருந்த குப்பைகள் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments