பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புற்றஉ மாரியம்மன் கோயில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புற்றஉ மாரியம்மன் கோயில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி, பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற புற்றஉ மாரியம்மன்
கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த
Advertisement
Advertisement
அன்பரசி(32), கணினி தட்டச்சராகப் பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை அவா் அலுவலகப் பணியில் இருந்தபோது, சித்தாலிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த இருவா் வரிச்சீட்டு வழங்குமாறு கேட்டனராம். அதற்கு, அன்பரசி பதிவேடு வழங்கினால் மட்டுமே ரசீது போட முடியும் எனக்கூறினாராம்.
இதனால், ஆத்திரம் அடைந்த இருவரும், அங்கு இருந்த பிற ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அன்பரசியை திட்டி, தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அன்பரசி அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.