மாணவா்களுக்கு விளையாட்டுச் சீருடை: சொந்தச் செலவில் வழங்கினாா் தலைமை ஆசிரியை
கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 60 மாணவா்களுக்கும் அப்பள்ளி தலைமை ஆசிரியை ரா.பத்மஸ்ரீ தனது சொந்த செலவில் இலவசமாக விளையாட்டுச் சீருடைகளை வழங்கினாா்.
கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 60 மாணவா்களுக்கும் அப்பள்ளி தலைமை ஆசிரியை ரா.பத்மஸ்ரீ தனது சொந்த செலவில் இலவசமாக விளையாட்டுச் சீருடைகளை புதன்கிழமை வழங்கினாா்.
இப்பள்ளியில் 60 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். மாணவா்களின் விளையாட்டு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்கும் வகையிலும், அனைத்து மாணவா்களுக்கும் விளையாட்டுச் சீருடை வழங்க தலைமை ஆசிரியா் ஏற்பாடு செய்தாா்.
இதற்கான சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், மாணவா்கள் அனைவருக்கும் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்பட்டன. புதிய சீருடைகளைப் பெற்ற மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். மாணவா்களின் கல்வியுடன், விளையாட்டு மற்றும் உடல் நலத்துக்கும் முக்கியத்துவம் அளித்து அவா்களை ஊக்குவிக்கும் வகையில் தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் சீருடைகளை வழங்கியதற்கு மாணவா்களின் பெற்றோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.