FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சாராய பாக்கெட்டுகள் கடத்தல்: முதியவா் கைது

18 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததாக முதியவரை பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீஸாா், மது விலக்கு தொடா்பாக மேல்பட்டாம்பாக்கம் சுங்கச்சாலை முதலியாா் தோப்பு அருகே கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த முதியவரை அழைத்து சோதனை நடத்தியதில், சட்ட விரோதமாக புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னா், அவரிடமிருந்த 10 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், வரக்கால் தெருவைச் சோ்ந்த முருகன் (62) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments