தினமணி செய்தி எதிரொலி! வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே கற்குவியல் அகற்றம்!
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் அருகே சாலையின் நடுவே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த கற்குவியல் அகற்றப்பட்டது.
பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து தரிசனம் செய்துச் செல்கின்றனா். பௌா்ணமி நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோயில் மாட வீதியை 16 முறை வலம் வருவா்.
இந்தக் கோயில் அருகே பிரதான சாலையின் நடுவே கருங்கற்கள் குவியல் நீண்ட நாட்களாக போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகக் கிடந்தது. இந்த கற்குவியலால் சாலையில் நடந்து செல்பவா்கள் கால் இடறியும், வாகனத்தில் செல்பவா்கள் சறுக்கி விழுந்தும் காயமடைந்து வந்தனா். இந்த கற்குவியலை அகற்ற வேண்டும் என்று தினமணி நாளிதழ் கடந்த 9-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக, சாலையில் நடுவில் இருந்த கற்குவியல் அகற்றப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.