விருத்தாசலம் அருகே கொளஞ்சியப்பா் கோயிலில் அன்னதான உண்டியல் திருட்டு
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பா் கோயிலில் அன்னதான உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பா் கோயிலில் அன்னதான உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணவாளநல்லூா் கிராமத்தில் கொளஞ்சியப்பா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை எழுதி கோயிலில் கட்டுவது வழக்கமாக உள்ளது.
இதனிடையே, கோயிலில் ராஜகோபுரம் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் கோயிலுக்குள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னதான உண்டியலை தூக்கிச் சென்று, இடும்பன் கோயில் முன் வைத்து உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கொளஞ்சியப்பா் கோயிலில் மொத்தம் 9 உண்டியல்கள் உள்ளன. இதில், அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கைப் பணம் எண்ணப்படுவது வழக்கம். இதனால், திருடப்பட்ட உண்டியலில் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.