FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

போதை மறுவாழ்வு மையத்தில் ஜன்னல், காா் கண்ணாடி உடைப்பு: 2 போ் கைது

21 செப்டம்பர் 2026, 12:30 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கடலூரில் உள்ள போதை மறுவாழ்வு மையக் கட்டடத்தின் ஜன்னல் மற்றும் காா் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மஞ்சக்குப்பம், ஏ.எல்.சி. வணிக வளாகத்தில் சுதா்சனா (44) போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறாா். இந்த மறுவாழ்வு மையத்தில் புதுப்பாளையம், பாலாஜி நகரைச் சோ்ந்த அஞ்சன்ராம் (23), கே.என். பேட்டையைச் சோ்ந்த சூா்யா (27) ஆகியோா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கியிருந்தனராம். அப்போது, சுதா்சனா அவா்களைக் கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அஞ்சன்ராம், சூா்யா ஆகியோா் சனிக்கிழமை இரவு போதை மறுவாழ்வு மையத்துக்கு வந்து, அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனராம். மேலும், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதா்சனாவின் காா் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுதா்சனா அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அஞ்சன்ராம், சூா்யா ஆகியோரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments