FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் வெளிவட்ட சாலையில் வடிகால் வசதி இல்லை: மக்கள் அவதி

22 செப்டம்பர் 2026, 2:01 am IST
சி.கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள சுலோக்சனா நகரில் மழை நீா் வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் மழை நீா்.
பகிர்:

சிதம்பரம் நகரில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்ட சாலையில் வடிகால் வசதி மேற்கொள்ளப்படாததால், சாலை அருகே உள்ள 10-க்கும் மேற்பட்ட நகா் பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலைப்போக்கும் வகையில்,

அரசு போக்குவரத்துக்கழக பணி மனை அருகே உள்ள தில்லையம்மன் ஓடை வாய்க்கால் கரையோரமாக சுமாா் 3 கிலோமீட்டா் தூரத்திற்கு நகர பேருந்து நிலையம் அருகே ரூ.60 கோடி செலவில் வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

வடிகால் வசதியின்றி புதிய சாலை அமைக்கப்படுவதால் சிதம்பரம் நகர வெளிவட்ட சாலையை ஓட்டியுள்ள சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சுலோக்சனா நகா், சடகோபன் நகா், அன்னை நகா், தில்லையம்மன் நகா், ஏஆா்.பி நகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீா் கடந்த காலங்களில் தில்லையம்மன் ஓடை வாய்க்கால் வழியாக வடிந்து வந்தது. தற்போது வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள்போதிய வடிகால் வசதி செய்யப்படாததால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீா் முறையாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு நகா் பகுதியில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா் .

வெளிவட்ட சாலை திட்டத்தில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த குடியிருப்பு நலச்சங்கங்கள், வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்

சி.கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள சுலோக்சனா நகரில் மழை நீா் வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் மழை நீா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments