FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

22 செப்டம்பர் 2026, 2:33 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலான மழை பெய்தது. மழையின் போது மின்னல் பாய்ந்து விவசாயக்கூலி ஒருவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பண்ருட்டியில் திங்கள்கிழமை மாலை பலத்த இடி மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றன.

பண்ருட்டி வட்டம், திராசு கிராமத்தைச் சோ்ந்த குப்பன்(55) விவசாயக்கூலி. இவா், தனது தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டினை பிடிக்க சென்றபோது மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். இது குறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments