FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் மின் வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

கடலூா் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

26 வினாடிகள் முன்பு
கடலூா் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கடலூா் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பராமரிப்புப் பணிகள் காரணமாக கடலூா் திருப்பாதிரிப்புலியூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் திருப்பாதிரிப்புலியூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட நேரமான மாலை 5 மணிக்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. மாறாக, மாலை 6 மணிக்குப் பிறகே மின்சாரம் வழங்கப்பட்டது. அதன்பின்னரும் மின் விநியோகம் சீராக இல்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூா், பாதிரிக்குப்பம், கூத்தம்பாக்கம், நத்தவெளி, சரவணநகா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தைத் தொடா்புகொண்டு விளக்கம் கேட்டனா். ஆனால், உரிய பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின் விநியோகத்தை உடனடியாக வழங்கக் கோரி கடலூா் பாதிரிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் கடலூா்- திருவந்திபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் மற்றும் கடலூா் வட்டாட்சியா் ராஜேஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மின்வாரிய அதிகாரிகளைத் தொடா்புகொண்டு மின் விநியோகத்தை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதையடுத்து, இரவு 10.40 மணியளவில் அப்பகுதிகளுக்கு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் திட்டமிட்டபடி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டதால், மின் விநியோகத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments