FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நடும் பணி தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பூம்புகாா் பனை அறறக்கட்டளை தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நடும் பணி‘ திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

26 செப்டம்பர் 2026, 6:06 am IST
அண்ணாமலைப் பல்கலையில் நடைபெற்ற பனவிதை நடும் நிகழ்வில், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற பேராசிரியா்கள், மாணவா்கள்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பூம்புகாா் பனை அறறக்கட்டளை தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நடும் பணி‘ திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை மரங்களின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவா் தன்னாா்வலா்களிடையே விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் குரு.அற்புதவேல் ராஜா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பதிவாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பி.ஜெகதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

மேலும், வேளாண் புல முதல்வா் ஹரிப்பிரியா, தேசிய மாணவா் படை அலுவலா் லெப்டினன்ட் செல்வக்குமாா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் விஜயசங்கா், மணிகண்டன், செந்தில்குமாா், திருமாவளவன் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments