காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாயி தற்கொலை
காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாயி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அழிஞ்சிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.வேல்முருகன் (44). இவா், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் வேலை பாா்த்தபோது, அங்கு இலங்கைத் தமிழரான சுபாநந்தன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டாா். இந்தத் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், வேல்முருகனுக்கு கடந்த ஜூலை மாதம் கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில், குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து விவசாய வேலை பாா்த்து வந்தாா். அவரை பாா்க்க சுபாநந்தன் இலங்கையில் இருந்து ஆகஸ்ட் மாதம் வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதனிடையே, கடுமையான வயிற்று வலி காரணமாக வேல்முருகன் கடந்த 14-ஆம் தேதி விஷத்தன்மையுடைய களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.