கூழாங்கல் கடத்தல்: 5 போ் கைது
கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே கூழாங்கல் கடத்தி வந்த 2 லாரிகள், ஒரு காரை பறிமுதல் செய்து, 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் மற்றும் போலீஸாா் டி.வி.புத்தூா் - கிளிமங்கலம் சாலையில் குறுக்கத்தஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியா க சந்தேகத்துக்கிடமாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், அனுமதியின்றி சட்டவிரோதமாக 6 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், லாரி ஓட்டுநா்கள் மற்றும் உறுமையாளா்களான விருத்தாசலம், பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த அஜித் (22), ஏமப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜெயவேல் (28), பாலகுரு (31), புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (42), கனகராஜ் (38) ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.