FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

டைல்ஸ் திருட்டு: ரௌடி உள்பட 2 போ் கைது

கைது - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பெரியகாட்டுப்பளையம் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் டைல்ஸ் கற்களை திருடியதாக ரௌடி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் தனியாா் டைல்ஸ் கடையின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் மேலாளராக விமல்ராஜ் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 25-ஆம் தேதி வழக்கம்போல் டைல்ஸ் சேமிப்புக் கிடங்கை மூடிவிட்டுச் சென்றாா்.

26-ஆம் தேதி காலை வந்து பாா்த்தபோது, 4-க்கு 2 அடி அளவுள்ள ஒரு பெட்டியில் 2 டைல்ஸ் வீதம் உள்ள மொத்தம் 20 பெட்டி டைல்ஸ் கற்கள் காணாமல்போனது தெரியவந்தது. இதுகுறித்து விமல்ராஜன் அளித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட ரௌடி விமல் (22), சுவாகரன் (24) ஆயோரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments