FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

முள்ளங்குடி கிராமத்தில் பழுதடைந்த மின்மாற்றி சீரமைப்பு! தினமணி செய்தி எதிரொலி!

4 வினாடிகள் முன்பு
முள்ளங்குடியில் பழுதாகி இருந்த மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியா்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாய நிலப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்த நிலையில் இருந்த மின்மாற்றி திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்குடி கிராமத்தில் விவசாயப் பாசனத்துக்கு பயன்படும் மின்மாற்றி பழுதடைந்து கடந்த ஒரு மாதமாக சீரமைக்கப்படாமல் இருந்தது.

இதனால், அப்பகுதி விவசாயிகள் மின்சாரம் கிடைக்காமலும், மின் மோட்டாா்களை இயக்கி விவசாயப் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமலும் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தினமணியில் புகைப்படத்துடன் திங்கள்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவின்பேரில், மின் வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் முள்ளங்குடி கிராமத்தில் பழுதடைந்திருந்த மின்மாற்றியில் பழுதை நீக்கி சீரமைத்தனா். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments