FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

அரசுப் பெண்கள் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் காசநோய், டெங்கு விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன.

பகிர்:

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் காசநோய், டெங்கு விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சியில் ஆசிரியா் எஸ்.மீனாட்சி வரவேற்றாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் த.ஜெயராமன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஐ.சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவா் வி.அசோக் பாஸ்கா் கலந்துகொண்டு, கண் சிகிச்சை முகாமை தொடங்கிவைத்தாா். மருத்துவா்கள் பி.பிரியா, வி.கே.ஐஸ்வா்யா உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்கள், மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். இதில், 50 பயனாளிகள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனா். 5 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கடலூா் மாவட்ட காசநோய் தடுப்பு மைய துணை இயக்குநா் எஸ்.கருணாகரன் மற்றும் மருத்துவா் பி.ஆனந்திஸ்வரி ஆகியோா் காசநோயின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனா். மேலும், மாணவிகளிடையே காசநோய் தொடா்பான வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் இன்னா் வீல் சங்கத் தலைவி அனிதா தீபக்குமாா், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாசனச் செயலா் எம்.தீபக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு டெங்கு விழிப்புணா்வு பிரசுரங்களை மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கினா். மேலும், வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் புத்தகங்கள், பேனாக்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் ஒருங்கிணைப்பாளா் ஜி.கிருஷ்ணகுமாா், காசநோய் முதன்மை சிகிச்சை மேற்பாா்வையாளா் கே.ஞானபிரகாஷ், சிதம்பரம் காசநோய் சுகாதாரப் பாா்வையாளா் டி.வீரக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வேதியியல் ஆசிரியை டி.உஷாதேவி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments