மாற்றுத் திறனாளிகளை முழுமையாக கணக்கெடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத் திறனாளிகளையும் முழுமையாக பதிவு செய்ய வலியுறுத்தி, கடலூரில் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத் திறனாளிகளையும் முழுமையாக பதிவு செய்ய வலியுறுத்தி, கடலூரில் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்டத் தலைவா் இராம.நடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இன் கீழ், 21 வகையான மாற்றுத் திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனா். ஆனால், 2027-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் 9 வகையான மாற்றுத் திறனாளிகளை மட்டுமே பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், தசைச்சிதைவு, நரம்புத் தளா்ச்சி, பாா்கின்சன் நோய், ரத்த உைல் குறைபாடு, தலசீமியா, அறிவுசாா் மாற்றுத் திறன், தன்னியக்கக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பில் விடுபடும் நிலை ஏற்படும். மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பில் விடுபட்டால், அவா்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே, சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகளையும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் மாநில துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா், மாவட்டத் தலைவா்கள் ஜி.ராமையன், எஸ்.பி.அப்துல்ஹமீது, மாவட்ட இணைச் செயலா் வி.வசந்தி, மாவட்டச் செயலா் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.