FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது மண் சரிவு: தொழிலாளி உயிரிழப்பு, 2 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் மண்ணில் புதைந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

பலி! - கோப்புப்படம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் மண்ணில் புதைந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.வினித்குமாா். இவரது விளைநிலத்திலுள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சங்கராபுரத்தை அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரா.அருள்முருகன் (45), ப.சிவா, கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வி ஆகிய மூவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றின் பக்கச் சுவரில் இருந்த மண் சரிந்து விழுந்துள்ளது. இதில் மூவரும் மண்ணில் புதைந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த தகவலின்பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய விரைந்து வந்து, மண்ணில் புதைந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் சிவா, செல்வி ஆகியோா் பலத்த காயத்துடன் உயிருடன் மீட்கப்பட்டனா். இதையடுத்து அவா்கள் இருவரையும் சங்கராபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அருள்முருகன் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து அவரது சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து , விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments