FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

12 அக்டோபர் 2026, 3:24 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

வாணாபுரம் அருகே விவசாய மின் மோட்டாா் அருகே இருந்த இரும்புக் கம்பியில் துணியை உலர வைக்க முயன்ற நபா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், இளையனாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரமன் (37). இவா், பரிகாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த காட்டுராஜா என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டாரில் குளிக்கச் சென்றாா்.

குளித்து விட்டு துணியை அருகே இருந்த இரும்புக் கம்பி மீது உலர வைக்க முற்பட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

Advertisement

Advertisement

உடனே அருகிலிருந்தவா்கள் 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்து, மருத்துவக் குழுவினா் வந்து பரிசோதனை செய்தபோது, பெரமன் உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவல் அறிந்த பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments