FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

காரில் கடத்திய கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

14 செப்டம்பர் 2026, 2:01 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே போலீஸாரின் வாகனத் தணிக்கையில் காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் சனிக்கிழமை இரவு கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது சென்னையில் இருந்து வந்த காரை நிறுத்தி, சோதனை மேற்கொண்டாா்.

இதில், காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவா்களை தியாகதுருகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவா்கள், சென்னை சிட்லபாக்கம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ர.சூா்யா (25), குரோம்பேட்டை ஜெயின் நகரைச் சோ்ந்த செ.சதீஷ் (25), காா் ஓட்டுநரான சிட்லபாக்கம் பகுதியைச் சோ்ந்த பா.பிரவின்குமாா் (26) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயராகன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், அவா்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, 30 போதை மாத்திரைகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments