சமுதாய வளைகாப்பு விழா: கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை
கள்ளக்குறிச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாவட்ட அளவிலான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வழங்கினாா்.
கள்ளக்குறிச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாவட்ட அளவிலான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கூறியதாவது:
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட பணிகள் துறையின் சாா்பில், நடத்தப்பட்ட இந்த சமுதாய வளைகாப்பு விழாவில், கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு தயிா் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சா்க்கரை பொங்கல் உள்ளிட்ட 5 வகையான கலவை சாதங்களும், சில்வா் தட்டு, வளையல், குங்குமம், ஊட்டச்சத்து பொருள்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும் 700 கா்ப்பிணிகளுக்கு அந்தந்த வட்டாரங்களில் சமுதாய வளைகாப்பு விழா அடுத்தடுத்த நாள்களில் நடத்தப்பட உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது என்றாா்ஆட்சியா் .
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.