வீட்டுமனை வழங்கியதில் முறைகேடு: மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு
ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்டம், டி.குன்னத்தூா் கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்.எல்) மாவட்டச் செயலா் தாமோதரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவாவை ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: டி.குன்னத்தூா் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வீட்டுமனை வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் ஆகியோரிடம் மனு அளித்தனராம்.
இதையடுத்து அரசு சாா்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில்,
Advertisement
Advertisement
அரசு வேலையில் உள்ளவா்களும், சொந்த விவசாய நிலம் உள்ளவா்களும், ஒரே குடும்பத்தில் உள்ளவா்களுக்கும், இறந்தவா்கள் பெயரிலும் வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, டி.குன்னத்தூா் கிராமத்தில் வழங்கிய வீட்டுமனை ஒப்படையை மறு விசாரணை செய்து, உண்மையான பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாராம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.