அரசு மருத்துவமனையில் பழுதான உபகரணங்களை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பழுதான உபகரணங்களைச் சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர்
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பழுதான உபகரணங்களைச் சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரியில் நூதன முறையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் சுதாகர் ரத்தினம் தலைமையில் ராஜா திரையங்கம் அருகே நிர்வாகிகள் புதன்கிழமை ஒன்று கூடி, அங்கிருந்து உடலில் காயகட்டுகளுடன் முக்கிய வீதிகள் வழியாக அவர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை அருகே வந்தனர். அங்கு அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரக் கேடுகளைக் கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.