FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய கட்சியின் பெயர்  5 வாரங்களில் அறிவிப்பு: ப.கண்ணன்

தான் தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர்  5 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று முன்னாள் எம்.பி.  ப.கண்ணன் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தான் தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர்  5 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று முன்னாள் எம்.பி.  ப.கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தனது ஆதரவாளர்களை புதன்கிழமை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
பல்வேறு சிக்கல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கவே அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளேன். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் கட்சி பெயரை அறிவிப்போம். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும். நாங்கள் பிராந்தியக் கட்சி என்பதால்,  சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவோம்.
தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். அதிக வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் - முதல்வர் இடையில் சரியான உறவு இல்லை. இந்த விஷயத்தில் புதுவை அமைச்சரவைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆட்சியாளர்கள் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆட்சியைவிட்டுச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, சசிகலா கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவில் இருந்து கண்ணன் விலகினார்.
இந்த நிலையில், கண்ணனின் தீவிர ஆதரவாளர்கள் புதன்கிழமை அவரைச் சந்தித்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய கண்ணன் புதிய கட்சித் தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments