காலமானார் பாரதி வசந்தன்!
புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரு மான பாரதி வசந்தன் (68) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார்.
புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரு மான பாரதி வசந்தன் (68) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார்.
அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) காலை 10 மணிக்கு பூமியான்பேட்டை இடுகாட்டில் நடைபெறவுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் பாரதி வசந்தன்.
கவிஞரும், எழுத்தாளருமான இவர், 70-க்கும் மேற்பட்ட கட்டுரை, கவிதை, சிறுகதை புதினம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு புதுவை அரசின் கலை மாமணி, புதுவை கம்பன் கழக விருது மற்றும் தமிழ் அமைப்புகள் விருது என பல விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தலித் இலக்கியத்தில் கவிஞர் தமிழ் ஒளிக்குப் பிறகு சிறந்து விளங்கியவர். இவரது பெரியவாய்க்கால் தெரு எனும் நாவலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.
தம்பல சிறுகதை நூலானது பிரெஞ்சு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்துள்ளது. இது, பாரதியார் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
பிறகு, நாவலாகவும் வெளிவந்தது. இவருக்கு மனைவி அ.ஜோஸ்பின், மகள், மகன் உள்ளனர். தொடர்புக்கு 9443075927.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.