முகப்பு
புதுச்சேரி

பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு: புதுவை முதல்வர்

புதுவை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார் ராஜிநாமா.

Updated On : 27 ஜூன், 2025 at 2:07 PM
புதுவை முதல்வர் ரங்கசாமி.
பகிர்:

புதுச்சேரி பாஜக அமைச்சரின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினர்.

இதனையடுத்து முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ரங்கசாமி, தன்னை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர் சாய் சரவணன்குமார் கொடுத்த ராஜிநாமா கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாகவும், இந்தக் கடிதம் ஏற்கப்பட்டதாகவும், அமைச்சரின் ராஜிநாமாவும் ஏற்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த அமைச்சர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

summary

Chief Minister Rangasamy announced after a meeting with the Lieutenant Governor that the resignation of the Puducherry BJP minister has been accepted.

முழு கட்டுரையைப் படிக்க →